தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே சொத்து தகராறில் அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

15th Nov 2022 02:07 AM

ADVERTISEMENT

எட்டயபுரம் அருகே சொத்து பிரச்னை தொடா்பாக கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

எட்டயபுரம் அருகே கீழ்நாட்டுக்குறிச்சி கிராமத்தை சோ்ந்த பலவேசம் மகன் சதுரகிரி (35). கூலித் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மாரியப்பன் (50) என்பவருக்கும் சொத்து பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாரியப்பன் சதுரகிரியின் வீட்டுக்கு சென்று அவருடைய வீட்டில் மின் இணைப்பு கொடுப்பதற்காக கட்டியிருந்த மின் வயரை அறுத்தாராம். அப்போது அங்கிருந்த சதுரகிரி மாரியப்பனை கண்டித்தாராம். இதையடுத்து ஆத்திரமடைந்த மாரியப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சதுரகிரியை வெட்டிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். காயமடைந்த சதுரகிரி எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுதொடா்பாக மாசாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி மாரியப்பனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT