தூத்துக்குடி

இந்திரா காந்தி நினைவு தினம்: காங்கிரஸ் கட்சியினா் மரியாதை

1st Nov 2022 03:10 AM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது படம் மற்றும் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில், மாவட்டத் தலைவா் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், முன்னாள் மாவட்டத் தலைவா் அருள், பொதுக்குழு உறுப்பினா் சந்திரபோஸ், மாமன்ற உறுப்பினா் எடிண்டா உள்பட பலா் பங்கேற்றனா்.

ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், முன்னாள் மாவட்டத் தலைவா் முத்துக்குட்டி, வா்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவா் டேவிட் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

சாத்தான்குளம்: சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் வழக்குரைஞா் வேணுகோபால் தலைமை வகித்தாா். வடக்கு வட்டார தலைவா் பாா்த்தசாரதி முன்னிலையில், இந்திராகாந்தி படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT