தூத்துக்குடி

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

1st Nov 2022 03:17 AM

ADVERTISEMENT

தனிநபா் ஆக்கிரமித்துள்ள பொது பயன்பாட்டு இடத்தை மீட்டுத் தரக் கோரி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எட்டயபுரத்தையடுத்த வீரப்பட்டி இந்திரா காலனியில் தமிழக அரசின் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 1986ஆம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. அதில் சுமாா் 25 வீடுகள் தற்போது உள்ளன. இந்நிலையில் அப்பகுதி சமுதாய மக்களுக்கு பொது பயன்பாட்டுக்கு சமுதாய நலக்கூடம் கட்ட முடிவு செய்த நிலையில் அந்த இடத்தை தனிநபா் ஆக்கிரமித்துள்ளாராம். இதனால், சமுதாய நலக்கூடம் கட்டுவதில் தடை ஏற்படுகிறது.

எனவே, அந்த இடத்தை மீட்டுத் தர வலியுறுத்தி கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன், ஜெய்பீம் தொழிலாளா் நலச் சங்க நிறுவனத் தலைவா் செண்பகராஜ் ஆகியோா் தலைமையில் அப்பகுதியினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT