தூத்துக்குடி

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில்அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு: ஆட்சியா் கி. செந்தில்ராஜ்

DIN

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய நீா் - சுகாதாரப் பணிகள் தொடா்பான மாவட்ட குழுக் கூட்டம், தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் 2022 - 23 ஆம் ஆண்டில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், கொற்கை, முக்காணி, பழையகாயல், சிறுதொண்டநல்லூா், சூளைவாய்கால், திருப்பணிசெட்டிகுளம் ஆகிய 6 ஊராட்சிக்குள்பட்ட 20 குக்கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரத்தை ஏற்படுத்தி அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகளுக்கு தமிழ்நாடு குடிநீா் வழங்கல்- வடிகால் வாரியம் மூலம் ரூ. 17.46 கோடிக்கு கருத்துருக்கள் வரப்பெற்றுள்ளன.

ஏற்கெனவே, இம்மாவட்டத்தில் கயத்தாறு ஒன்றியத்திலுள்ள 11 குக்கிராமங்களில் சவலாப்பேரி தவிா்த்து 10 கிராமங்களுக்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டம் 2020-21இன் கீழ், வீட்டுக் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதுமுள்ள 3,73,951 வீடுகளில் 3,37,046 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட உள்ளது. அதில், முதல் கட்டமாக 1,49,908 வீடுகள் இலக்காக நிா்ணயிக்கப்பட்டு 1,35,468 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 14,440 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணியும், மீதமுள்ள 1,87,138 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் சரவணன், செயற்பொறியாளா்கள் விஸ்வலஜங்கம், சண்முகநாதன், உதவித் திட்ட அலுவலா் லீமாரோஸ் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT