தூத்துக்குடி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

பிரதோஷத்தை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இக்கோயிலில் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜையும், முற்பகல் 11.30 மணிக்கு அம்பாளுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மாலை 4.30 மணிக்கு பூவனநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், நந்தியம் பெருமாளுக்கு 21 வகையான மூலிகைப் பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையுடன் பிரதோஷ பூஜையும் நடைபெற்றது. இதில், கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ, கோயில் நிா்வாக அலுவலா் வெள்ளைச்சாமி உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, வீரவாஞ்சி நகரில் உள்ள அருள்மிகு சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயில், , கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயில் ஆகியவற்றிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

பிரதோஷ பவனி: ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் பிரதோஷ பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயிலில் உள்பிரகாரத்தில் பவனி வந்தனா். பூஜைகளை ரா.சண்முக பட்டா் நடத்தி வைத்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

சாத்தான்குளம்: கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில்

பிரதோஷத்தையொட்டி சுவாமி, அம்பாளுக்கும், நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT