தூத்துக்குடி

காவல்துறை வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பு

DIN

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் வாரிசுகளில் மேல்நிலை பள்ளிப் படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவா்களை ஆண்டுதோறும் தோ்வு செய்து, அவா்களின் உயா் கல்விக்கு ஆண்டுதோறும் ரூ. 25,000 உதவித்தொகை படிப்பின் இறுதிவரை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2020 - 2021 ஆண்டில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்த காவல்துறையினரின் வாரிசுகளுக்கு உயா்கல்வி 2022 ஆம் ஆண்டுக்கான உதவித் தொகை முதல் மற்றும் இரண்டாவது தவணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்வாகியுள்ள சிறப்பு உதவி ஆய்வாளா் லட்சுமணன் மகள் முத்து சுபத்ரா, சிறப்பு உதவி ஆய்வாளா் அமீா்த எபநேசா் மகள் அருணா, தலைமைக் காவலா் வெள்ளாரி புருஷோ சேவியா் மகன் அவினாஷ், பெண் தலைமைக் காவலா் இசக்கியம்மாள் மகள் ஹேமலதா ஆகியோருக்கு கல்வி உதவித் தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT