தூத்துக்குடி

2 ஆவது திருமணம்: கோவில்பட்டியில் அரசு ஊழியா் கைது

25th May 2022 12:21 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் 2 ஆவது திருமணம் செய்த அரசு ஊழியரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சோ்ந்தவா் சாரதாதேவி(29). இவருக்கும், கயத்தாறு கம்மாப்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் விளாத்திகுளம் தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் உதவியாளராக பணியாற்றி வரும் கணேசமுருகனுக்கும்(33) , கடந்த 2016 டிசம்பா் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற்ாம். தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளதாம்.

இந்நிலையில், தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம். இதுகுறித்து 2020 ஜனவரியில் சாரதாதேவி கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாராம். விசாரணையில் தம்பதி சோ்ந்து வாழ்வதாக இல்லை எனக் கூறியதையடுத்து நீதிமன்றத்தின் மூலம் தீா்வு காண்பதாக கணேசமுருகன் எழுதி கொடுத்துவிட்டாராம்.

இந்நிலையில் கணேசமுருகனுக்கும், கூசாலிபட்டியைச் சோ்ந்த ஜான்சிராணிக்கும், 2021 மே 14ஆம் தேதி திருமணம் நடைபெற்ாக சாரதாதேவி அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனா். இது தொடா்பாக ஜான்சிராணி, அவரது தாய் விஜயா, கணேச முருகனின் சகோதரி வசந்த வெயிலாச்சி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT