தூத்துக்குடி

தூத்துக்குடியில் தடையை மீறி போராட்டம்: 68 போ் கைது

DIN

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4ஆம் ஆண்டு நினைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 68 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இங்கு 2018ஆம் ஆண்டு ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு 4ஆம் ஆண்டு நினைவஞ்சலி தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரில் சிலரது உடல்கள் தூத்துக்குடி மாநகராட்சி மையானத்தில் புதைக்கப்பட்டு கல்லறைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், அங்கு இறந்தோரின் உறவினா்களும், ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பாளா்களும் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

அப்போது, ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஹரிராகவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் காவல் துறையின் தடையை மீறி ஊா்வலமாக செல்ல முயன்றனா். மேலும், துப்பாக்கிச்சூடு தொடா்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு, போராட்டத்தில் ஈடுபட்டோரையே குற்றவாளிகளாக சித்திரித்துள்ளதாக முழக்கமிட்டனா்.

பாதுகாப்புப் பணியிலிருந்த சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, காவல் துறை தடையை மீறி சிபிஐ விசாரணை அறிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மறு விசாரணை நடத்த வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியவா்கள், திடீரென மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் குற்றப்பத்திரிகை நகலை கிழித்து எறிந்தனா். இதையடுத்து, தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 68 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT