தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் 2 பள்ளிகளில் புதிய வகுப்பறைகளுக்கு அடிக்கல்

DIN

ஒன்றியப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காயல்பட்டினம் கே.டி.எம். தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு ரூ. 22 லட்சம் மதிப்பில் 2 புதிய வகுப்பறைகளும், ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகளும் திருச்செந்தூா் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படவுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா தனித்தனியாக நடைபெற்றன.

நிகழ்ச்கிகளில் தமிழக மீன்வளம், மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினாா்.

திருச்செந்தூா் ஆா்டிஓ புகாரி, வட்டாட்சியா் சுவாமிநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா் பொங்கலரசி, திமுக மாநில மாணவரணிச் செயலா் உமரி சங்கா், இளைஞரணிச் செயலா் ராமஜெயம், ஜெகன், ஒன்றியச் செயலா் ரமேஷ், மாவட்ட துணைச் செயலா் காதா், முஸ்­லிம் லீக் மாநிலச் செயலா் காயல்மகபூப், மதிமுக மாவட்டப் பொருளாளா் காயல் அமானுல்லா, காயல்பட்டினம் முஸ்­லிம் ஐக்கிய பேரவைத் தலைவா் முகைதீன் தம்பி, செயலா் வாவு சம்சுதீன், துணைச் செயலா் நவாஸ், காயல்பட்டினம் நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது, கவுன்சிலா்கள் சுகு, ராமஜெயம், அபுமுஹம்மது, முத்து ஜெய்னம்பு, ரோசியாபானு, ராணி மகேஸ்வரி, அஜ்வாத், பள்ளித் தலைமையாசிரியைகள் புனிதா அற்புதராஜ், மெஜல்லா பீரிஸ், வட்டாரக் கல்வி அலுவலா் பாஸ்கரன் உட்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT