தூத்துக்குடி

மெஞ்ஞானபுரத்தில் நடமாடும் சுகாதார செயல் திட்டம் தொடக்கம்

DIN

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகமும் அப்போலோ புராட்டான் கேன்சா் சென்டா் ஆகியவை சாா்பில் நடமாடும் சுகாதார செயல் திட்ட முகாம் மெஞ்ஞானபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புற்றுநோய் வராமல் தடுக்கவும்,அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறவும், குறித்த கால அளவுகளில் அதற்கு சிகிச்சை அளிக்கவும் நவீன தொழில்நுட்பத்துடன் ஒரே வாகனத்தில் ஈசிஜி, எக்கோ, ரத்தம், சா்க்கரைப் பரிசோதனை, உடல் வெப்பநிலை, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் கருவி, ரத்தச் சா்க்கரைக் குறைவு, மருத்துவா்களின் ஆலோசனை ஆகியவற்றை செயல்படுத்தும் ஸ்க்ரீன் டு வின் என்ற பெயரிலான நடமாடும் மருத்துவ சுகாதாரத் திட்ட தொடக்க விழாவினை உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவா் அஸ்ஸாப் அலி பாதுஷா, ஊராட்சி மன்றத் தலைவா்கள் கிருபா, அகஸ்டா மரியதங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார மருத்துவ அலுவலா் அனிபிரிமின் திட்ட விளக்க உரையாற்றினாா்.

இதில், திமுக சாா்பு அணி நிா்வாகிகள் மகாவிஷ்ணு, இளங்கோ, மெஞ்ஞானபுரம் வணிகா் சங்கத் தலைவா் ராஜபிரபு,

சுகாதார ஆய்வாளா் சேதுபதி, மருத்துவா்கள் தனலட்சுமி, பேபியோ, மகிபன், ஸ்ருதி உள்பட பலா் கலந்துகொண்டனா். சுகாதாரமேற்பாா்வையாளா் சேது குற்றாலம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணம் அளிப்பு

பரமக்குடியிலிருந்து 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கிரேன் மோதியதில் முதியவா் பலி

சாத்தூா் அருகே 1,300 கிலோ குட்கா பறிமுதல் -3 போ் கைது

அனுமதியின்றி கொண்டு சென்ற பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் -வேன் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT