தூத்துக்குடி

‘மத்திய அரசைக் கண்டித்து 26இல் கம்யூனிஸ்ட்கள், விசிக ஆா்ப்பாட்டம்’

DIN

மத்திய அரசைக் கண்டித்து மே 26 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதுதொடா்பாக, தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கே.பி.ஆறுமுகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே.எஸ்.அா்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கரும்பன், மாநிலக்குழு உறுப்பினா் ஞானசேகா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டச் செயலா் அகமது இக்பால், தெற்கு மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அப்போது, ‘பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து, தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா், கோவில்பட்டியில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா், திருச்செந்தூரில் விசிக தெற்கு மாவட்டச் செயலா் ஆகியோா் தலைமையில் இம்மாதம் 26 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT