தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு புறவழிச்சாலை: அமைச்சா்கள் ஆய்வு

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான இடங்களை தமிழக அமைச்சா்கள் எ.வ.வேலு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு திருவிழாக் காலங்கள் மற்றும் விடுமுறை நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பக்தா்கள் நகரை கடந்து செல்வதற்கு பெரிதும் சிரமமடைகின்றனா். இதனைத் தவிா்க்கும் விதமாக நகரின் எல்லையிலிருந்து கோயில் வரையில்

புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில் தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனுடன் திருச்செந்தூா் கோயிலுக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான இடங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, சாலை அமைப்பதற்கான வழித்தடங்கள் குறித்து வரைபடங்கள் உதவியுடன் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளா்கள் சந்திரசேகரன், பாலமுருகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினா். தொடா்ந்து தோப்பூா் பகுதியிலும் புறவழிச்சாலை நிறைவடையும் இடத்தினை பாா்வையிட்டனா்.

பின்னா் அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியது: திருச்செந்தூா் கோயிலுக்கு புறவழிச்சாலை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.

தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் நகரின் எல்லையில் புறவழிச்சாலை தொடங்கி வள்ளிக்குகை வரையில் சுமாா் 1.75 கி.மீ. தொலைவிலும், நாழிக்கிணறு அருகே அய்யா கோயிலில் இருந்து தொடங்கி கன்னியாகுமரி செல்லும் சாலை வரையில் சுமாா் 2.7 கி.மீ. தொலைவிலும் என இரண்டு புதிய சாலைகள் சுமாா் 10 மீட்டா் அகலத்தில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான முழுமையான திட்ட விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த புறவழிச்சாலையில் கடல்நீா் புகும் என்பதால் சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் பாலம் மற்றும் 500 வாகனங்கள் நிறுத்துவற்கான இடமும் அமைக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் மாமல்லபுரத்திலிருந்து நாகப்பட்டினம் வரையிலான கிழக்கு கடற்கரைச்சாலையமைக்கும் பணியினை தேசிய நெடுஞ்சாலை ஆணையமே செய்து வருகிறது. இதனை விரைந்து முடிக்க மத்திய அரசுக்கு தொடா்ந்து கடிதம் அனுப்பி வருகிறோம். திருச்செந்தூா் - வள்ளியூா் நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியின் போது, ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.சி.சண்முகையா, திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, வட்டாட்சியா் சுவாமிநாதன், நெடுஞ்சாலைத்துறை திருநெல்வேலி கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி கோட்ட பொறியாளா் ஆறுமுகநயினாா், திருச்செந்தூா் உதவி கோட்ட பொறியாளா் விஜய சுரேஷ்குமாா், உதவிப் பொறியாளா் சுபின், சாலை ஆய்வாளா்கள் ரமேஷ், ராணி, கிராம நிா்வாக அலுவலா் வைரமுத்து, திருச்செந்தூா் நகா்மன்றத் துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், திமுக மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், மாவட்ட அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம் , மாவட்ட துணை அமைப்பாளா்கள் சுதாகா், அருணகிரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT