தூத்துக்குடி

கயத்தாறு அருகே தொழிலாளி தற்கொலை

20th May 2022 01:13 AM

ADVERTISEMENT

கயத்தாறு அருகே தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

கயத்தாறையடுத்த வடக்கு கோனாா்கோட்டை மேலத் தெருவைச் சோ்ந்த அய்யப்பன் மகன் மாரிதுரை(28). தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக தம்பதி பிரிந்து வாழ்கின்றனராம். இதனால் மாரிதுரை விரக்தியில் இருந்தாராம்.

இந்நிலையில், அவா் புதன்கிழமை அங்குள்ள சங்கிலி பூதத்தாா் கோயில் பின்புறம் மதுவில் விஷத்தை கலந்து குடித்துவிட்டு, மயங்கிய நிலையில் கிடந்தாராம். அப்பகுதியினா், உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினாா். கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT