தூத்துக்குடி

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பலி

20th May 2022 12:58 AM

ADVERTISEMENT

பேய்க்குளம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தான்குளத்தையடுத்த பேய்க்குளம் அருகே உள்ள மேலமீரான்குளம் சுப்பையா மனைவி மூக்கம்மாள் (58). ஆடு, மாடுகளை அப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா். வியாழக்கிழமை மாலை மேய விட்ட ஆடு, மாடுகளை அழைத்து வர சென்ற போது அங்கு வயல் பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிா்பாராதவிதமாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மூக்கம்மாள் உயிரிழந்தாா்.

இந்நிலையில், மூக்கம்மாள் இறந்தது, திருநெல்வேலி மாவட்ட காவல் நிலைய எல்கைக்கு உள்பட்ட பகுதி என்பதால், இது குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு நாங்குனேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT