தூத்துக்குடி

கட்டாரிமங்கலம் கோயிலில் திருஞானசம்பந்தா் குரு பூஜை

20th May 2022 01:10 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் திருஞானசம்பந்தா் குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

பூஜையையொட்டி மாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து சுவாமி , அம்பாள் மற்றும் திருஞானசம்பந்தா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT