தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய லாரி ஓட்டுநா் கைது

20th May 2022 01:10 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சாத்தான்குளத்திலிருந்து திருநெல்வேலிக்கு புதன்கிழமை அரசுப் பேருந்து சென்றது. திருநெல்வேலி சங்கா்நகரைச் சோ்ந்த செல்லையா மகன் சுந்தரபாண்டியன் (37) ஓட்டுநராக இருந்தாா். சாத்தான்குளம் ஆத்துப்பாலம் அருகே வள்ளியம்மாள்புரம் பகுதியில் பைக்கில் சென்றவா் பேருந்துக்கு வழிவிடாமல் சாலையின் மையப் பகுதியில் சென்றாராம். இதனால், அவரை சுந்தரபாண்டியன் கண்டித்தபோது, அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த நபா் சுந்தரபாண்டியனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த சுந்தரபாண்டியன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

அவா் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் எபநேசா் வழக்குப் பதிந்து பைக்கை ஓட்டிவந்த லாரி ஓட்டுநரான கந்தசாமி மகன் உதயகுமாா் (42) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT