தூத்துக்குடி

‘குண்டா் தடுப்புச் சட்டத்தில் 100 போ் கைது’

20th May 2022 01:13 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் 100 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி பூபால்ராயபுரத்தைச் சோ்ந்த விஜி என்பவரை கடந்த மாதம் 19ஆம் தேதி கொலை செய்ததாக கைதான அவரது கணவா் சகாய வினோத், ஆறுமுகனேரியில் சீனந்தோப்பு விலக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்தோரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த 5ஆம் தேதி கைதான ஆறுமுகனேரி வடக்கு காமராஜபுரம் பகுதியை சோ்ந்த முருகன், ஜெபராஜ் ஆகிய 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

நிகழாண்டில், இதுவரை போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 23 போ் உள்ளிட்ட 100 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். கடந்த மாதத்தில் மட்டும் 30 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா் என, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT