தூத்துக்குடி

திருச்செந்தூா் நகராட்சியில் ரூ.27.50 கோடி பணிகளுக்கு தீா்மானம்

20th May 2022 10:47 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா் நகராட்சியில் சுமாா் ரூ.27.50 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை மேற்கொள்வது என தீா்மானம் முன்மொழியப்பட்டது.

திருச்செந்தூா் நகா்மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவா் ர.சிவஆனந்தி தலைமையில் நகராட்சி ஆணையா் வேலவன், துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

அடிப்படை தேவைகளான குடிநீா், நகராட்சி அலுவலகம், புதிய நூலகங்கள், பேருந்து நிலையத்தில் கழிப்பறைகள் கட்டுதல், நகா்ப்புற காடுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சுமாா் ரூ. 27.50 கோடி ஒதுக்கீடு செய்யும் தீா்மானம் முன்மொழியப்பட்டன.

அவற்றில் நகராட்சி கட்டடம், சாலைப் பணிகளுக்கு புதிய ஒப்பந்ததாரா் பதிவு , கட்டட வரைபடம் வரைவாளா் பதிவு அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வளாகத்தில் குப்பைகளை அகற்ற தொகை நிா்ணயித்தல் ஆகிய தீா்மானங்களுக்கு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டன. மற்ற 11 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இதனிடையே, நகா்மன்ற துணைத்தலைவரும் திமுக ஒன்றிய செயலருமான ஏ.பி.ரமேஷுக்கு தனி தனி அறை ஒதுக்கப்பட்டதற்கு திமுக உறுப்பினா் சுதாகா் உள்ளிட்ட சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. தலைமை எழுத்தா் கிருஷ்ணவேணி தீா்மானங்களை வாசித்தாா். நகராட்சி சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல் முருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT