தூத்துக்குடி

திருச்செந்தூா் துா்க்கையம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

20th May 2022 10:49 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்தரும் துா்கா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலை ராகு காலத்தில் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT