தூத்துக்குடி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

20th May 2022 10:51 PM

ADVERTISEMENT

மேலஈரால் ஊராட்சிக்கு உள்பட்ட வாலம்பட்டியில் பொது கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும், மயானத்திற்கு செல்லும் சாலையை தாா்சாலையாக மாற்றித் தர வேண்டும், தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும், சண்முகாபுரம் - கீழஈரால் செல்லும் சாலையில் கழிவுநீா் ஓடை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், மேலஈராலில் 1 முதல் 6ஆவது வாா்டு பகுதிகள் வரை ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தேமுதிகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சுப்பையா என்ற சுரேஷ் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் கோரிக்கை மனுவை வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசனிடம் வழங்கினா். மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினாா்.

போராட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் பொன்ராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள் பிரபாகரன், பெருமாள்சாமி, அவைத் தலைவா் கொம்பையாபாண்டியன், நகரச் செயலா் பழனி, நகர அவைத் தலைவா் பாலமுருகன், கேப்டன் ஒன்றியச் செயலா் மேகலிங்கம், முன்னாள் மாவட்ட துணைச் செயலா் மலைராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT