தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

20th May 2022 10:50 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிச்சாமி, ஆணையா் சுப்புலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் 2021 - 2022ஆம் ஆண்டு வரவு, செலவு அறிக்கை மற்றும் ஒன்றிய பொது நிதி (கணக்கு எண்: 1) 1-4-2022இல் உபரிநிதி கணக்கீடு படிவம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது உள்பட 42 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஊராட்சி ஒன்றிய பொறியாளா் சங்கரசுப்பிரமணியன், உதவிப் பொறியாளா்கள் படிபீவி, மேரி, கணக்கா் பாலமுருகன் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT