தூத்துக்குடி

சாத்தான்குளம்: இலங்கை நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்

16th May 2022 12:50 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே இலங்கை நிவாரண நிதிக்கு யாசகர் ஒருவர் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்துள்ள பகுதியை சேர்ந்தவர் பூல் பாண்டி.  யாசகம் மூலம் தனது வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் இவர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை வந்தார்.

இதையும் படிக்க: கமல் ஹாசனை இயக்கும் பா. இரஞ்சித்: அறிவிப்பு

யாசகம் மூலம் தான் சேமித்து வைத்திருந்த ரூ.10ஆயிரத்தை, இலங்கை நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப் போவதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT

அவர் மேலும் தெரிவித்ததாவது: 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்தபோது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்துள்ளதாகவும், தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நிதியுதவி அளித்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாவட்ட ஆட்சியரை சந்தித்த அவர், தனது வருத்தத்தை தெரிவித்து ரூ.10ஆயிரத்தை வழங்கினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT