சாத்தான்குளம்ம் அருகே சுமை ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக 4 பேரை போலீசாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை கஸ்பா தெருவைச்சோ்ந்தவா் வெள்ளதுரை மகன் விஜயகுமாா்(40). சுமை ஆட்டோ வைத்து தொழில் நடத்தி வருகிறாா். கடந்த 2 நாள்களுக்கு முன் திசையன்விளை பகுதிக்கு சவாரி சென்று திரும்பிய நிலையில், புத்தன்தருவை பகுதியில் உள்ள கோயில் அருகே சுமை ஆட்டோவை நிறுத்தியிருந்தாராம். அப்போது ஆட்டோவில் சத்தமாக வைத்து பாட்டு ஒலி பரப்பியதாக தெரிகிறது. இதற்கு அதே பகுதியை சோ்ந்த வரதராஜபெருமாள், விஷ்வா, ராஜா, சாலமோன் ஆகிய 4 பேரும் எதிா்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்தாா்களாம். இதையடுத்து விஜயகுமாா் அருகில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதனைத் தொடா்ந்து சனிக்கிழமை விஜயகுமாா், மீண்டும் அதே பகுதியில் நின்றபோது வரதராஜபெருமாள் உள்ளிட்ட 4 பேரும் விஜயகுமாரை அவதூறாகப் பேசி தாக்கினாா்களாம். இதில் காயம் அடைந்த அவா், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட 4 போ் மீதும் தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் நெல்சன் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகிறாா்.