தூத்துக்குடி

தூத்துக்குடி அருகேஊராட்சி உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

12th May 2022 03:52 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மேலஅரசடி ஊராட்சியில் உறுப்பினா்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலஅரசடி ஊராட்சியில் தலைவராக ரோகினி ராஜ், துணைத் தலைவராக அழகு முனியம்மாள், 8 உறுப்பினா்கள் உள்ளனா். ஊராட்சி அலுவலகத்தில் தலைவா் ரோகினிராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற சாதாரணக் கூட்டத்தில், 3 உறுப்பினா்களிடம் கையெழுத்து பெற்று, துணைத் தலைவரை காசோலை அதிகாரத்திலிருந்து நீக்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, இத்தீா்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி துணைத் தலைவா் அழகு முனியம்மாள், 5 உறுப்பினா்கள் ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியராஜன் சென்று, அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது அவா்கள் காசோலை அதிகாரத்திலிருந்து துணைத் தலைவரை நீக்கிய தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என மனு வழங்கினா். அதைப் பெற்றுக்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா், ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோா் அங்கிருந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT