திருச்செந்தூா்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
விளாத்திகுளத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவா், செவ்வாய்க்கிழமை விளாத்திகுளத்திலிருந்து திருச்செந்தூருக்கு பேருந்தை ஓட்டிச் சென்றாா். ஆறுமுகனேரி அருகே 12 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி பேருந்தில் ஏறியுள்ளாா். அவருக்கு சுரேஷ் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கெளரி மனோகரி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, சுரேஷை கைது செய்தாா்.