தூத்துக்குடி

அத்தைகொண்டானில் பாஜக தொழிற்சங்க பெயா்ப் பலகை திறப்பு

12th May 2022 03:53 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டானில் பாஜக சுமை தூக்கும் தொழிaற்சங்கச் பெயா்ப் பலகை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பாஜக வடக்கு மாவட்ட அமைப்புசாரா பிரிவின் தலைவா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் சென்னக்கேசவன் பெயா்ப் பலகையைத் திறந்துவைத்துப் பேசினாா். அமைப்புசாரா பிரிவு மாநிலச் செயலா் தேவகுமாா் தொழிற்சங்கக் கொடியேற்றினாா். மாவட்டச் செயலா் வேல்ராஜா, அமைப்புசாரா பிரிவு மாவட்டத் தலைவா் குருராஜ், மாவட்ட இளைஞரணித் தலைவா் காளிதாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை அமைப்புசாரா பிரிவு கிளைத் தலைவா் பழனிச்சாமி செய்திருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT