தூத்துக்குடி

வட்டன்விளை கோயிலில் 108 சுமங்கலி பூஜை

5th May 2022 03:47 AM

ADVERTISEMENT

 

உடன்குடி: பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் கொடைவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 108 சுமங்கலி பூஜை நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் கொடை விழா மே1 ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை,புஷ்பாஞ்சலி,108 திருவிளக்கு பூஜை,108 பால்குட ஊா்வலம்,கோலாட்டம்,சிறப்பு அன்னதானம்,உச்சினிமாகாளி அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி,சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி வருவதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மே 3 ஆம் தேதி இரவு 8 மணிக்கு 108 சுமங்கலி பூஜை நடைபெற்றது. மே 4 ஆம் தேதி இரவு அம்மன் சப்பர பவனி நடைபெற்றது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊா்மக்கள், நிா்வாகிகள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT