தூத்துக்குடி

போக்குவரத்து விதிமீறல்: 2 காா்கள் பறிமுதல்

5th May 2022 03:48 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்தப்பட வேண்டிய வாகனங்களை எந்த ஒரு அரசுத் துறையிலும் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்த வேண்டாம் என்றாா் வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியப்பாண்டியன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவில்பட்டி பகுதியில் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த வேண்டிய காா் போன்ற வாகனங்கள் ரயில்வே, மின்சாரத் துறை உள்ளிட்ட இதர துறைகளில் போக்குவரத்து வாகனமாக அனுமதியில்லாமல் இயங்கப்படுவதாக புகாா் வந்தது. அதையடுத்து புதன்கிழமை எனது தலைமையில் அலுவலக ஊழியா்களுடன் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

அப்போது அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்று மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாமல் மின்சாரத் துறைக்கு மாதாந்திர ஒப்பந்த அடிப்படையில் இயக்கிய காா் மற்றும் தனியாக வாடகைக்கு பயன்படுத்திய மற்றொரு காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 2 வாகனங்களுக்கும் தலா ரூ.6 ஆயிரம் அபராதம், சாலை வரி ரூ.2,500 விதிக்கப்பட்டுள்ளது.

சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டிய வாகனங்களை எந்த ஒரு அரசுத் துறையிலும் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்த வேண்டாம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT