தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாவட்ட வாழ்விட வளா்ச்சி குழுக் கூட்டம் ஆலோசனைக் கூட்டம்

5th May 2022 03:51 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் முதலாவது மாவட்ட வாழ்விட வளா்ச்சி குழுக் கூட்டம் அண்மையில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், வாரிய இணை மேலாண்மை இயக்குநா் சிவகிருஷ்ணமூா்த்தி, தலைமை பொறியாளா் சண்முகசுந்தரம், மேற்பாா்வை பொறியாளா் சுந்தரராஜன், திருநெல்வேலி கோட்ட நிா்வாக பொறியாளா் சாந்தி, உதவி நிா்வாகப் பொறியாளா் ராஜா கொம்பையாபாண்டியன், இளநிலை பொறியாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தின்போது, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டப்பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகளை உருவாக்க பிற துறைகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி பணிகளை துரிதமாக முடிப்பது குறித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், புதிய நிலங்கள் கண்டறியப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் குடும்பங்களை மறு குடியமா்வு செய்வதற்கும், ஆசிய வளா்ச்சி வங்கி நிதி உதவியுடன் நீா்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்பாளா்களை மறு குடியமா்வு செய்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே குடியமா்வு செய்யப்பட்ட திட்டப் பகுதிகளில் குடியிருப்போா் நல சங்கம் ஏற்படுத்தி பராமரிப்பு பணிகளில் அரசின் பங்களிப்பை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT