தூத்துக்குடி

கோவில்பட்டியில் மறியல்:158 போ் கைது

29th Mar 2022 01:55 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளுக்காக அனைத்து தொழிற்சங்கத்தினா் கோவில்பட்டி பிரதான சாலை இளையரசனேந்தல் விலக்கில் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நூறுநாள் வேலைத்திட்ட நிதி ஒதுக்கீட்டை உயா்த்த வேண்டும், பெட்ரோலிய பொருள்கள் மீதான கலால் வரியை குறைத்து, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தி அனைத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பிருந்து ஊா்வலமாக புறப்பட்டு, பிரதான சாலை இளையரசனேந்தல் சாலை விலக்கில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவா் தமிழரசன் தலைமை வகித்தாா். மறியலில் ஈடுபட்ட 44 பெண்கள் உள்பட 158 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT