சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பேய்க்குளம் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடந்தது.
ஐந்து இடங்களில் நடைபெற்ற இம்முகாமில் 30 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
இதேபோல் அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சவேரியாா்புரம் ஆா்.சி நடுநிலைப் பள்ளியில் 12 வயது முதல் 14 வயதுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் 12 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் அம்பலச்சேரி பள்ளி தலைமை ஆசிரியா் ஜீவா, சவேரியாா்புரம் பள்ளி தலைமை ஆசிரியா் விண்ணரசி உள்பட அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.