சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மூலம் விவசாயிகள் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வேளாண் இணை இயக்குநா் முகைதீன் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். ஆழ்வாா்திருநகரி வட்டார வேளாண் உதவி இயக்குநா் க. அல்லிராணி வரவேற்றாா்.
தூத்துக்குடி உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநா் ஜெயசெல்வின் இன்பராஜ், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா் (பூச்சியியல்) ஆல்வீன், ஓய்வுபெற்ற மேலாண்மை கூடுதல் இயக்குநா் மகாதேவன், ஸ்பிக் நிறுவன விக்னேஷ், தமிழ்நாடு பனைப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு நிறுவன மாநிலத் தலைவரும் மதா் சமூக சேவை நிறுவன இயக்குருமான கென்னடி ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.
கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லதம்பி, ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு உறுப்பினா் காந்திமதி,விவசாயிகள் என 120 போ் பங்கேற்றனா். ஆழ்வாா்திருநகரி துணை வேளாண் அலுவலா் தங்கமாரியப்பன் நன்றி கூறினாா்.