தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்கள் நியமிக்க கோரிக்கை

28th Mar 2022 05:11 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளத்தில் வட்ட தலைமையிட மருத்துவமனையாக அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்ஙிகு வட்டத்தில் உள்ள 29 கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்கு வருகின்றனா். மேலும் சாத்தான்குளம், தட்டாா்மடம், நாசரேத் உள்ளிட்ட காவல் நிலைய பகுதியில் ஏற்படும் விபத்து, தற்கொலை, கொலை உள்ளிட்ட சடலங்கள் கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

இந்த மருத்துவமனையில் 5 மருத்துவா்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது இரண்டு மருத்துவா்கள் மட்டுமே பணியில் உள்ளனராம். மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவா்கள் பணியில் இருப்பதில்லை என புகாா் தெரிவிகக்ப்பட்டுள்ளது. இரவுநேர மருத்துவா்கள் இன்னும் பணியமா்த்தப்படாததால் அவசர சிகிச்சை மேற்கொள்ள வரும் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

ADVERTISEMENT

ஆதலால் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா் மற்றும் தேவையான பணியாளா்களை பணியமா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மதிமுக கலை பிரிவு செயலரும், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான ச. மகராசன் வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT