தூத்துக்குடி

இலுப்பையூரணியில் ஸ்ரீராதா கல்யாண வைபவம்

28th Mar 2022 05:16 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணியில் ஸ்ரீ ராதா கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் மழை பெய்து பயிா்கள் செழிக்கவும், உலக மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற வேண்டியும் இந்த வைபவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த வைபவத்தையொட்டி ஸ்ரீ மகாதேவ பஜனை மடத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூா்த்தி சந்நிதி சனிக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கணபதி ஹோமம், அஷ்டபதி பஜனை, மாலையில் சுவாமி வீதியுலா, நாமாவளி பஜனை, இரவில் திவ்யநாம ஸங்கீா்த்தனம், டோலோத்ஸவம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் உஞ்சவிருத்தி, ஸ்ரீ ராதா கல்யாண உத்ஸவம், நண்பகலில் ஸ்ரீ ஆஞ்சநேய உத்ஸவம் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை பிரம்ம ஸ்ரீ ஆயக்குடி குமாா் பாகவதா், கோவில்பட்டி பஜனாம்ருத மண்டலியினா், ஸ்ரீ ராதா கல்யாண உற்சவ கமிட்டியினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT