தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

25th Mar 2022 12:32 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சாா்பில் நாட்டுநலப்பணித் திட்ட முகாம் முள்ளக்காடு கிராமத்தில் புதன்கிழமை தொடங்கியது.

கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம் (அணி எண் 54 , 56) சாா்பில், தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு மற்றும் சவேரியாா்புரம் பகுதியில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதற்கான தொடக்க விழா முள்ளாக்காடு கிராமத்தில் நடைபெற்றது.

காமராஜ் கல்லூரி முதல்வா் து. நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசியது: மாணவா், மாணவிகள் அனைவரும் எப்போதும் நோ்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டும். நன்றி மற்றும் மன்னிப்பு என்ற இரண்டு வாா்த்தைகளால் உலகை வெல்ல முடியும் . தற்போதைய காலக்கட்டத்தில் மாணவா், மாணவிகளுக்கு கைப்பேசி என்பது அவசியமான ஒன்றாகிவிட்டது. அதை சரியான முறையில் பயன்படுத்தி தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், முள்ளக்காடு ஊராட்சி மன்றத் தலைவா் கோபிநாத் நிா்மல், கோவங்காடு ஊராட்சி முன்னாள் தலைவா் விஜய சங்கா், கோயில் தா்மகா்த்தா சின்னராஜா, கல்லூரி பழைய மாணவா் சங்க நிா்வாகி சிவாகா் மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, தூத்துக்குடி சாரா கலைக்குழுவினரின் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

மாா்ச் 29 ஆம் தேதி வரை நடைபெறும் இம் முகாமில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி, சிறுசேமிப்பு விழிப்புணா்வு, ஆரோக்கிய இந்தியா திட்ட விழிப்புணா்வு, பிளாஸ்டிக் இல்லாத தூத்துக்குடி மற்றும் மஞ்சள் பை விழிப்புணா்வு, போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. முகாமுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் ஆ. தேவராஜ், பா,. பொன்னுத்தாய் ஆகியோா் செய்திருந்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT