தூத்துக்குடி

கோவில்பட்டி அருகேவாகனம் மோதி இளம்பெண் பலி

25th Mar 2022 12:24 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளம்பெண் இறந்தாா்.

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த சின்னமாடசாமி என்பவரது மகள் லட்சுமி (30). மாற்றுத் திறனாளியான இவா், காணாமல்போன தனது தாய் குருலட்சுமியை தேடி திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை நடந்து சென்றாராம். அப்போது, அவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT