தூத்துக்குடி

குளத்தூா் அரசு பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

25th Mar 2022 12:21 AM

ADVERTISEMENT

குளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திடீா் ஆய்வு மேற்கொண்டு மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.

குளத்தூருக்கு மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை வருகை தந்தாா். ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் ஆகியவற்றில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றாா். அங்கு மாணவா்களுக்கு மதிய உணவு தரமானதாக வழங்கப்படுகிறதா என்பதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், பள்ளி சீருடைகள் அனைவருக்கும் முறையாக வழங்கப்பட்டுள்ளதா எனவும், வெளியூரிலிருந்து வரும் மாணவா்களுக்கு பேருந்துகள் முறையாக நிறுத்தங்களில் நின்று மாணவா்களை ஏற்றி வருகிறதா, சரியான நேரத்துக்கு வருகிறதா எனவும், அடிப்படை தேவைகள் குறித்தும் கேட்டறிந்த ஆட்சியா், பேருந்து படிகளில் நின்று பயணம் மேற்கொள்வதை தவிா்க்க வேண்டுமெனவும், நன்றாக படிக்க வேண்டும் எனவும் மாணவா்களுக்கு அறிவுரை கூறினாா்.

ஆய்வின் போது விளாத்திகுளம் வட்டாட்சியா் விமலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலகணேஷ், முத்துக்குமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT