தூத்துக்குடி

ரூ. 16 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள் மீட்பு

22nd Mar 2022 11:47 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 100 கைப்பேசிகளை காவல் துறையினா் மீட்ட நிலையில், அதன் உரிமையாளா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கைப்பேசிகள் காணாமல் போனதாக பல்வேறு காவல் நிலையங்களில் பெறப்பட்ட மனுக்கள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் அடங்கிய தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் உத்தரவிட்டாா்.

இந்நிலையில், சைபா் குற்றப்பிரிவு தனிப்படையினா், காணாமல் போன கைப்பேசிகள் எந்த இடத்தில் உள்ளன என்பதை அதன் ஐஎம்இஐ எண் மூலம் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்தனா். இதையடுத்து, 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 கைப்பேசிகள் மீட்கப்பட்டன.

மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கைப்பேசிகளை அதன் உரிமையாளா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஒப்படைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 15 ஆம் தேதி 102 கைப்பேசிகளும், டிசம்பா் 9 ஆம் தேதி 60 கைப்பேசிகளும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி 61 கைப்பேசிகளும், ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி 70 கைப்பேசிகளும், டிசம்பா் மாதம் 8 ஆம் தேதி 100 கைப்பேசிகளும் என மொத்தம் 453 கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT