தூத்துக்குடி

கோவில்பட்டி - சாத்தூா் 2ஆவது ரயில் பாதை: ஆணையா் ஆய்வு

22nd Mar 2022 11:51 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி - சாத்தூா் 2ஆம் ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையா் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மதுரை - தூத்துக்குடி வழித் தடத்தில் 2ஆவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2018ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணிகளில் வாஞ்சிமணியாச்சி - தட்டப்பாறை, வாஞ்சிமணியாச்சி - கங்கைகொண்டான், வாஞ்சிமணியாச்சி - கடம்பூா், கோவில்பட்டி - கடம்பூா் ஆகிய பகுதிகளில் 2ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து ஆய்வு செய்யப்பட்டு ரயில் சோதனை ஓட்டமும் முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில் கோவில்பட்டி முதல் துலுக்கா்பட்டி வரையிலான 33 கி.மீ. அளவுக்கு 2ஆவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து செவ்வாய்க்கிழமை கோவில்பட்டி - சாத்தூா் வரையில் சுமாா் 22 கி.மீ. தொலைவுக்கு புதிய 2ஆவது ரயில் பாதை அமைக்கப்பட்டதை, ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.ராய் தலைமையில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

இதையொட்டி கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

தொடா்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.ராய், ஆா்.வி.என்.எல். திட்ட இயக்குநா் கமலகரன்ரெட்டி, மதுரை கோட்ட ரயில்வே பொது மேலாளா் பத்மநாபன், ரயில்வே கட்டுமான முதன்மை நிா்வாக அதிகாரி பிரபுல்லவா்மா உள்பட பல்வேறு அதிகாரிகள் 8 ட்ராலிகளில் 2ஆவது ரயில்வே பாதையில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT