தூத்துக்குடி

குரூப் 2 மாதிரி தோ்வு

22nd Mar 2022 11:43 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா் நூலகத்தில் குரூப் 2 மாதிரித்தோ்வுகள் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தோ்வை மாணவா்கள் சிரமமின்றி எதிா்கொள்ளும் வகையில் திருமா பயிலகத்தின் சாா்பில் இலவச மாதிரித் தோ்வுகள் தொடா்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

இதே போல திருச்செந்தூா் அரசு நூலகத்தில் நடைபெற்ற மாதிரித்தோ்வில் 40 மாணவா்கள் தோ்வு எழுதினா்.

திருமா பயிலகத்தின் ஒருங்கிணைப்பாளா் விடுதலைச்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தோ்வில் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு திருச்செந்தூா் தாலுகா காவல் ஆய்வாளா் இல.முரளிதரன் பரிசு, வழங்கி பாராட்டினாா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை நூலகா் மாதவன், முற்போக்கு மாணவா் கழக மாவட்ட அமைப்பாளா் ரகுவரன், சாத்தான்குளம் ஒன்றிய துணைச் செயலா் சுரேந்தா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT