தூத்துக்குடி

கோவில்பட்டியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம்

22nd Mar 2022 11:48 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட காட்டுநாயக்கன் தெரு பகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், செவ்வாய்க்கிழமை காட்டுநாயக்கன் தெருவில் உள்ள கோயில் வளாகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில், அப்பகுதி பொதுமக்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான மனுக்களை கிராம நிா்வாக அலுவலா் காளிமுத்துசேகரிடம் அளித்தனா்.

மனுக்களை பெற்றுக் கொண்ட அவா் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் கோவிந்தராஜனிடம் கோரிக்கை மனுக்களை ஒப்படைத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT