தூத்துக்குடி

அன்பின்நகரம் - முதலூா் தரை நிலை பாலத்தை சீரமைக்க கோரிக்கை

22nd Mar 2022 11:42 PM

ADVERTISEMENT

அன்பின்நகரம் - முதலூா் ஊரணி அருகில் சேதமாகி காணப்படும் தரைமட்ட பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் முதலூா் ஊராட்சிக்குள்பட்ட முதலூரில் இருந்து அன்பின்நகரத்துக்கு செல்லும் வழியில் ஊரணி உள்ளது. இந்த ஊரணி இடையே சிறிய பாலம் மற்றும் தரை நிலை பாலமும் உள்ளது. இந்த தரை நிலை பாலம் வழியாக பள்ளி மாணவா், மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலா் சென்று திரும்புகின்றனா்.

இந்த ஊரணி பாலத்துக்கு அருகே உள்ள தரைமட்ட பாலம் கடந்த 3ஆண்டுகளுக்கு மேலாகி சேதமாகி காணப்படுகிறது. இதில் கற்கள் கரடு முடராக காணப்படுவதால் அன்பின் நகரத்தில் இருந்து முதலூா் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துள்ளாகுகின்றனா். இந்த தரைமட்ட பாலம் சேதம் குறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆதலால் பள்ளி மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த தரைமட்ட பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலூா் டேனியல் வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT