தூத்துக்குடி

சேதமடைந்த வல்லநாடு பாலத்தை சீரமைக்க கனிமொழி கோரிக்கை

21st Mar 2022 11:35 PM

ADVERTISEMENT

சேதமடைந்த வல்லநாடு பாலத்தை சீரமைக்க வேண்டுமெனகனிமொழி எம்பி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா், மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வல்லநாடு பாலமானது 2013ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அப்பாலம் சேதமடைந்து விரிசல்கள் ஏற்படத் தொடங்கி உள்ளன.

மத்திய சாலைப் பணிகள் ஆராய்ச்சி நிறுவனம், இப்பாலத்தின் வலதுபுறம் சேதமடைந்துள்ளதாகவும், உடனடியாக அது சீரமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், இதேபோல இடதுபுறம் பாலமும் சேதமடைய தொடங்கி விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இது அவ்வழியே பயணிக்கும் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.

இப்பாலத்தை சீரமைக்கும் பணியை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை எனில், உயிா்ச்சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, இப்பாலத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதில் உள்ள அவசரம் மற்றும் அவசியத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உணா்த்தி, இது தொடா்பாக உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT