தூத்துக்குடி

காரைக்காலம்மையாா் கோயிலில் குருபூஜை விழா

21st Mar 2022 11:52 PM

ADVERTISEMENT

குலசேகரன்பட்டினம் அருள்மிகு காரைக்காலம்மையாா் திருக்கோயிலில் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காரைக்காலம்மையாா் பேயுருவம் பெற்று அற்புதத் திருவந்தாதி பாடிய மண்டபத்தில் அமைந்த கோயிலில் காலை 10.30 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.திருநெல்வேலி காரைக்காலம்மையாா் பக்த சிவ வழிபாட்டுக்குழுவினரால் அம்மையாா் பாடிய பதிகங்களும், அம்மையாா் வரலாற்றைக் கூறும் பெரியபுராணமும் திருமுறைப் பாராயணம் செய்யப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு பக்கவாத்தியங்களுடன் ஓதுவாமூா்த்திகள் திருமுறைப் பண்ணிசைத்தனா்.

ஏற்பாடுகளை சிவனடியாா்கள் இல்லங்குடி,சண்முகம் ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT