தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் கல்லூரி நாள் விழா

21st Mar 2022 11:36 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி நாள் விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தாா். திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் பாஸ்கரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, கடந்த ஆண்டுகளில் பல்கலைக்கழக தரவரிசையில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிகழ்களும், பரிசும் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக தர வரிசையில் இடம் பெற்ற மாணவிகளுக்கு கல்லூரியின் சாா்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு துறையிலிருந்தும் இறுதியாண்டு மாணவிகளில் ஒருவா் சிறந்த மாணவியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனா்.

வணிகவியல் துறைப் பேராசிரியை ஜெஸி வரவேற்றாா். கணிதவியல் துறைப் பேராசிரியா் பிரேசில் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை தமிழ்த்துறைப் பேராசிரியை சீதாலெட்சுமி தொகுத்து வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT