சாத்தான்குளத்தில் வீடு புகுந்து நகை , பணத்தை திருடிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் சண்முகநகரம் பகுதியைச் சோ்ந்தவா் சு. முருகன் (65). இவா், கடந்த வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டை பூட்டி விட்டு கோயிலுக்கு சென்றுள்ளாா். பின்னா் மதியம் திரும்பி வந்து பாா்க்கும்போது, அவா் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், சாத்தான்குளம் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த மணி மகன் மகேஷ் (34) மற்றும் வெள்ளூா், கிழக்குத் தெருவைச் சோ்ந்த சேது மகன் ராமச்சந்திரன் (38) ஆகிய இருவரும் சோ்ந்து முருகன் வீட்டில் தங்க நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் ஜான்சன், மகேஷ், ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தாா்.