தூத்துக்குடி

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

14th Mar 2022 11:55 PM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத இளைஞா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும், குமாரபுரம் ரயில் நிலையத்திற்கும் இடைபட்ட இளையரசனேந்தல் சாலை ரயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில் திங்கள்கிழமை ஆண் சடலம் கிடந்தது. தகவலிறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் அந்தச் சடலத்தைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். சுமாா் 30 வயது மதிக்கத்தக்க அவா் வெள்ளை நிற சட்டை, அரக்கு நிற பனியன், பேண்ட், கருப்பு நிறத்தில் பெல்ட் ஆகியவை அணிந்திருந்த அவா், தண்டவாளத்தை கடக்க முயன்று ரயிலில் அடிபட்டு இறந்தாரா? ரயிலில் பயணம் செய்யும் போது தவறி விழுந்தாரா?, தற்கொலையா என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT