தூத்துக்குடி

கயத்தாறில் பயணிகள் நிழற்குடை திறப்பு

14th Mar 2022 11:55 PM

ADVERTISEMENT

கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட 2 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திங்கள்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட நொச்சிகுளம், ஆத்திகுளம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கல்வெட்டை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

விழாவில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பிரியா குருராஜ், அதிமுக ஒன்றியச் செயலா் வண்டானம் கருப்பசாமி, ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டச் செயலா் செல்வகுமாா், முன்னாள் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT