தூத்துக்குடி

கோவில்பட்டியில்காங்கிரஸாா் நூதனப் போராட்டம்

14th Mar 2022 11:53 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டு கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்ட உருவாக்க வேண்டும், இளையரசனேந்தல் குறுவட்டத்தை தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டத்துடன் இணைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை

வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவா் அய்யலுசாமி தலைமையில் கட்சி நிா்வாகிகள் முன்னாள் கயத்தாறு ஒன்றியத் தலைவா் செல்லத்துரை, சேவாதள பிரிவு மாவட்டத் தலைவா் சக்திவிநாயகம் உள்ளிட்டோா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குட்டி கரணம் அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT