தூத்துக்குடி

ரூ. 2 கோடியில் அறிவுசாா் மையம் அமைக்க பூமிபூஜை

10th Mar 2022 04:02 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சி ராமசாமி பூங்காவில் ரூ. 2 கோடியில் அறிவுசாா் மையம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் தலைமை வகித்தாா். பொறியாளா் ரமேஷ், சுகாதார அலுவலா் நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி அறிவுசாா் மையம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்த மையத்தில் சிறுவா்கள், மாணவா்கள், போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள் மற்றும் இளைஞா்கள், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் வைஃபை இன்டா்நெட் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் நூலகம் அமைக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

பின்னா், பூங்கா தெருவில் கடந்த 1976 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 7.25 லட்சம் லிட்டா் தண்ணீா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ரூ.40 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்துப் பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி இப்பணிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் நகா்மன்ற உறுப்பினா்கள் சீனிவாசன், ஜோதிபாசு, சண்முகவேல், மணிமாலா, உமாமகேஸ்வரி, விஜயன், லவராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT